பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹேம்புடன் பள்ளியிற்கல்வி

35

என்பவர் அப்பள்ளிக்கூடத்தேயிருந்து உழைத்து வந்த பெரியாருள் ஒருவர். அவரோடு நெருங்கி நாளும் நாளும் பழகுவதற்கு மாத்திரம் மாணவர் விடப்பட்டால், பள்ளிக்கூடம், வகுப்பு, ஆசிரியர் ஆகிய கருவிகள் வேண்டப்படுவன அல்ல என்று புக்கர் கருதினார். அப்பெரியாரின் அருங்குணங்களுள் ஒன்று சிறப்பாக அறிந்துகொள்ளத்தக்கது. அடிமைகள் விடுதலை அடைந்த நன்னாளுக்கு முன்னரெல்லாம் தென்னமெரிக்க வெள்ளையர்களோடு ஆர்ம்ஸ்டிராங்கு போர் புரிந்தாராயினும், பின்னர் ஒரு நாளும் அவ்வெள்ளையரை இகழ்ந்துரைத்தார் அல்லர். ஒருகால் எதிரியாயிருந்தவரை எக்காலும் எதிரியாகக் கருதலாகாது என்ற அவரது நோக்கம் விழுமியதன்றோ?

ஹேம்புடன் பள்ளியில் ஓராண்டு நன்றாகப் புக்கர் கல்வி கற்ற பின், கோடை விடுமுறைக் காலம் வரவே, மாணவர் எல்லாம் தத்தம் ஊருக்குச்செல்லத் தொடங்கினர். புக்கருக்கோ, ஊருக்குப் போகக் காசில்லை. யாது செய்வார் ! மற்ற மாணவர்களிடத்தில் தம் நிலையைச் சொல்லிக்கொள்ள அவருக்கு விருப்பமில்லை. தம்மிடம் இருந்த ஒரு பழைய சட்டையை விற்கத் துணிந்து முயன்றாராயினும், அம்முயற்சி பயனளிக்கவில்லை. எனவே, ஹேம்புடனை விட்டுப் புறப்படும் எண்ணமும் அற்றுப் போவதாயிற்று. ஏதேனும் வேலையொன்று