பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. பட்டம் பெற்றவர்

பட்டம் பெற்ற பிறகு புக்க தம்மோடு கற்றார் சிலரைப் போலவே சிற்றுண்டிச் சாலை ஒன்றில் ஏவலாள் வேலையில் அமர்ந்தார். மேசைமுன் வந்து உட்காருவோரைக் கவனிக்க வேண்டுவது அவர் கடமை. ஆனால், அந்த வேலையின் கடமைகளைச் செவ்வனே அவர் உணர்ந்தவரல்லர். ஆதலால், ஒரு மேசைமுன் உட்கார்ந்திருந்த நான்கு பொருளாளர்க்குக் கோபம் உண்டாக அவரைத் திட்டத் தொடங்கினார்கள். புக்கர் உள்ளே ஓடிவிட்டார். அதன் பயனாக ஏவலாள் பதவியை இழந்து தட்டினைத் தூக்குங் கீழாளாக நியமிக்கப் பட்டார். ஆனால், சில வாரங்களுக்குள் ஏவலாள் வேலையைக் கற்றுக்கொண்டு, அவ்வேலையை மீண்டும் பெற் றுச் செவ்வன் செய்வாராயினர். அவ்வுண்டிச் சாலையிலே பல முறை ஓர் அரிய விருந்தினராக எதிர்கொள்ளப்பட்ட பெருமை அவருக்குப் பிற்கால வாழ்க்கையில் ஏற்பட்டது.

சில மாதங்கள் கழித்துப் பக்கர் தமது ஊராகிய மால்டன் சென்று சேர்ந்தார். ஆங்கு நீரோப் பள்ளிக் கூடத்தில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அவ்வேலை அவருக்குக் காலையில் எட்டு மணிக்குத் தொடங்கி இரவில் பத்து மணிக்கே முடிவுறும். புத்தகங்களைக் கற்-