பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பட்டம் பெற்றவர்

43

பித்ததேயன்றி, வேறு சில அலுவல்களையும் பார்த்து வந்தார். தலையை எங்ங்ணம் வாரிக்கொள்வதென்றும், முகத்தையும் கைகளையும் எங்ஙனம் சுத்தமாக வைத்திருப்பது என்றும், உடைகளை எங்ங்ணம் தூயனவாய் வைத்திருப்பது என்றும் அவர் மாணவர்க்கு நன்றாகக் கற்பித்தார். மேலும், நீராடலின் நலத்தையும் பற்குச்சியாளுதலின் மேன்மையையும் விளக்கிக் கூறுவாராயினர்.

இப்பகற்பள்ளிக்கூடமேயன்றி, இரவுப் பள்ளிக்கூடம் .ஒன்றும் அவரது முயற்சியால் நிறுவப்பட்டது வயதான பல ஆடவரும் பெண்டிரும், பகலில் தொழில் புரிவோரும் கல்வி பெறும்பொருட்டே அப்பாடசாலை அமைக்கப்பட்டது. முதலிலிருந்தே அப்பள்ளிக் கூடத்திற் பல மாணவர் சேர்ந்து படிப்பாராயினர். அவ்விரண்டு பள்ளிக்கூடங்களிற் செய்த வேலை சாலா தென்று கருதி, புக்கர் இன்னும் சில தொண்டுகள் புரியத் தொடங்கினார். அத்தொண்டின் பயனாய்ச் சிறு வாசக சாலேயொன்றும் சொற்போர்க் கழகம் ஒன்றும் எழுந்தன. அவர் இரண்டு இடங்களில் வாரப் பள்ளிக் கூடம் வைத்து, ஞாயிற்றுக்கிழமைதோறும் வந்த மக்கட்குப் பாடஞ்சொல்லுவாராயினார். இவையேயன்றி, ஹேம்புடன் கலாசாலைக்கு அனுப்ப எண்ணிச் சில மாணவர்களைத் தனியாகப் பயிற்றினார். அவருக்குப் பொது நிதியிலிருந்து சிறிதளவு சம்பளம் கிடைத்த-