பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

தாயினும், அவர் பார்த்து வந்த வேலைகளெல்லாம் அச் சம்பளத்திற்காக அல்ல. அவர்பால் கற்க விரும்பிச் சென்ற எவரும் கற்பிக்கப்பட்டார். எடுக்க எடுக்கக் குறையாத விழுச்செல்வம் அன்றோ கல்வி அதனை வேண்டுவோர்க்கெல்லாம் உள்ளமுவந்து உதவிய வள்ளல் ஆயினார் வாஷிங்குடன். கல்வியின் அருமை பெருமைகளை அவர் அறிந்தவராதலின், அவருடன் பிறந்தாராகிய ஜான் என்பவரை ஹேம்புடனுக்கு அனுப்பிப் படிக்கவேண்டிய அளவு பொருள் உதவி செய்தார். அவரும் மூன்றாண்டில் படித்துத் திரும்பித் தமையருைக்குப் பொருந்திய வகையில் உதவி செய்வா ராயினர். பின் இவ்விருவரும் சேர்ந்து தம் தாய் வளர்த்த ஜேம்ஸ் (James) என்ற தம்பி முறையானை ஹேம்புடன் பள்ளிக்கு அனுப்பினர். கல்வியாலாய பயனை உணர்ந்த புக்கர் தம் சகோதரர் இருவரும் அக்கல்வியை அடைய உதவியது எத்துணைச் சிறந்தது!

இரண்டு ஆண்டுகள் மால்டனில் ஆசிரியராய் இருந்து தம் உடன் பிறந்தாரைப் படிக்க அனுப்பி யதேயன்றி, வேறு பல ஆண் பெண்களையும் பயிற்றி ஹேம்புடனுக்கு அனுப்பினர். 1878-ஆம் ஆண்டில்’ வாஷிங்குடன் என்ற ஊருக்குப்போய் ஆங்குத் தாம் பயில வேண்டுமென்று நினைத்தார். அவ்வண்ணமே ஆண்டுச் சென்று எட்டு மாதம் படித்தார், படிக்குங்-