பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பட்டம் பெற்றவர்

45

கால், அக்கல்லூரிக்கும் ஹேம்புடன் கலாசாலைக்கும் உள்ள வேற்றுமையைக் கண்டார். ஹேம்புடனிலோ, மாணவர் எல்லாம் உண்டி, நூல்கள், துணி, இருப்பிடம், இவற்றிற்கான பணத்தை வேலை செய்து தேடிக் கொண்டே படிக்க வேண்டியிருந்தபடியால், தன்னம் பிக்கையுடையவராய் இருந்தார்கள். ஆனால், வாஷிங்குடன் என்னும் ஊரின் கல்லூரியில் வசித்த மானவருட்பெரும்பாலார் பெரிய இடத்துப் பிள்ளைகள் போலக் காணப்பட்டனர். அவர்தம் செலவுக்கெல்லாம் அவருடைய உழைப்பு இன்றியே பணங் கிடைத்து வந்தது. அவர்கள் பள்ளியை விட்டுச் சென்ற நாளில் கிரீக்கு இலத்தின் மொழிகளைச் சற்று நன்றாகப் படித்திருந்தார்கள் என்று கூறலாமே தவிர, வாழ்க்கை நிலையையோ, வாழ்க்கை முறையையோ அவர்கள் அறிந்திருந்தார்கள் என்று கூறுவதற்கில்லை. படிப்பு முடிந்த தும் நாட்டுப்புறத்துக்குப் போய்த் தம் இனத்தாரை உயர்த்த வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு எழாமல், உண்டிச்சாலை ஏவலாளராகவும், மூட்டை தூக்குவோராகவும் வாழ்நாள் முழுதும் நகரத்திற் கழிக்கவே அவர்களுக்கு விருப்பம் இருந்தது. அவர்களெல் லாம் கிராமங்களுக்குப் போய் இயற்கையன்னையின் உதவியால் வாழாது ஒழிகின்றார்களே, உழுதூண் சுவையை விரும்பாது தொழுதுாண் சுவையை விரும்பிக் கெடுகிறார்களே என்று புக்கர் பல வேளை நினைத்ததுண்டு.