பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

னார்கள் ஊருக்குத் திரும்பியபின் புக்கருக்கு ஆர்ம்ஸ் டிராங்கினிடமிருந்து இன்னுெகு முடங்கல் வந்தது. புக்கர் உடனே புறப்பட்டு ஹேம்புடனுக்கு வந்து, அவ்விடத்தில் ஆசிரியராய் இருந்துகொண்டு மேலும் படிக்கலாம் என்பது அக்கடிதத்தில் வரைந்திருந்தது. புக்கரோ, தமது ஊரில் பள்ளிக்கூடம் ஏற்படுத்திப் பல மாணவர்களைப் பழக்கிக்கொண்டிருந்தார் என்பது முன்னரே கூறப்பட்டது. அவர் உடன் பிறந்தார் இருவரையும் வேறு சிறந்த மாணவர் நால்வரையும் பொறுக்கியெடுத்துப் பயிற்றி ஹேம்புடனுக்கு முன்னரே அனுப்பியுள்ளார். ஆதலின், அவர்தம் திறமை ஆண்டு நன்றாக வெளிப்பட்டிருக்க வேண்டும். இஃது அவரை ஆசிரியராக ஆங்கு அழைக்க ஒரு காரணமாய் இருந்திருக்கக்கூடும். தமது பள்ளிக்கூடத்தின் முன்னேற்றத்திற் புக்கர் பெரிதும் ஈடுபட்டிருந்தாராயினும், ஆசான் கட்டளையை மீற மனமில்லாதவராய், அப்பள்ளிக் கூடத்திலிருந்து அரிதிற்பிரிந்து ஹேம்புடன் சேர்ந்தார்.

ஹேம்புடனில் அப்பொழுது ஆர்ம்ஸ்டிராங்கு சிவப்பந்தியர் சிலரை நாகரிக வழியிற்பயிற்ற முற்பட்டிருந்தார். பொதுவாக, அக்காலத்திற் சிவப்பிந்தியருக்குக் கல்வி பயின்று பயனடையக் கூடிய ஆற்றல் இருந்ததாக எவரும் நம்புவது இல்லை. ஆர்ம்ஸ்டிராங்கோ, முயன்று பார்க்க உறுதி செய்துகொண்டார். அதற்-