பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பட்டம் பெற்றவர்

49

கெனவே புக்கர் அழைக்கப்பட்டார். எழுபத்தைந்து சிவப்பிந்தியர் அவரது பார்வையில் வைக்கப்பட்டனர். அவர் அவ்விந்தியருடைய ஆடை, இருப்பிடம், பயிற்சி முதலானவற்றை ஆய்ந்து வருவாரானார். எழுபத்தைந்து இந்தியர்கள் நடுவில் அவர் ஒருவரே நீகிரோவ ராய் இருந்தும், அவர்கள் நம்பிக்கையையும், நன்மதிப் பையும் சிறிது சிறிதாகப் புக்கள் பெறுவாரானார். வெள்ளையரினும் தாம் உயர்ந்தவர் என்று நினத்தவர்கள் சிவப்பிந்தியர்கள். அடிமை நாட்களில், பல நீகிரோவர் சிவப்பிந்தியர் சிலரிடம் அடிமையாய் இருந்துள்ளனர். அங்ஙனம் இருக்க, நீகிரோவரைவிடத் தாம் மிக உயர்ந்தவர் என்ற எண்ணம் இல்லாமல் இருந்தார்கள் என்று கூறுவதற்கில்லை. அதனும் முன் அவருடைய மதிப்பைப் பெறுவது எளிதன்று. புக்கரோ, அவர்களுக்குப் பல் கலகளையும் தொழில்களையும் வெற்றியுடன் கற்பித்தார். இப்படி ஓராண்டு கழிந்தது.

அதற்குள்ளாக, ஆர்ம்ஸ்டிராங்கு ஒர் இரவுப் பள்ளிக்கூடம் ஏற்படுத்தத் துணிந்தார். பகற்பள்ளியிற் சேர்ந்து படிக்கப் போதுமான காசு.பணமில்லாத பல இளைஞர், கல்வி பெற வழியில்லையே என ஏங்கி நின்றதை அவர் அறிந்தார். - ஆதலால், அவறுக்கென ராப் பள்ளி அமைக்கவே இப்பொழுது முடிவு செய்தார். அதைப் போற்றிடப் புக்கரைப் பணிக்க, அவரும் இனங்-