பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

அவருக்கு ஏன் ஏமாற்றம் வாராது இருக்கும்? அங்குக் கட்டடம் ஒன்றும் இல்லை ஆனால், ஆர்வமும் கல்விப் பசியும் உடைய மக்கள் பலர் இருந்ததைக் கண்டார். சட்டசபையால் அளிக்கப்பட்டிருந்த பொருள், ஆசிரி யர்கள் சம்பளத்திற்காகச் செலவிடப்படலாமே அன்றி, அதிலிருந்து கட்டடத்திற்காகக் காசு ஒன்றும் செல விடப்படக்கூடாது. சூழ்ந்து சுற்றிப் பார்த்துப் புக்கர் ஓரிடத்தைப் பள்ளிச்சாலைக்கெனக் கண்டு பிடித்தார். அது பழைய மாதாகோவிலின் அருகே இருந்து இடிந்து விழுந்த சந்தைக்கூடம். மாதா கோவிற் கட்டடமும் இடிந்து போகும் நிலையில் இருந்தது. 1881 ஜூன் மாதத்தில் அவ்வூரில் வந்து சேர்ந்த அவருக்கு அக்கட்டடம் கண்டுபிடிப்பதற்கும், அலபாமா மண்டலம் முழு வதுஞ் சுற்றிப் பள்ளிக்கூடத்தைப் பற்றி விளம்பரப் படுத்துவதற்கும் ஒரு மாதம் ஆயிற்று. பிறகு ஜூலை 4-ஆந்தேதி பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது. அப் பள்ளிக்கூடத்தால் நீகிரோவர் கல்வி பெற்ற பின், தத் தம் நிலங்களை விட்டுவிட்டுப் புதிய நடையுடைகளை உடையவராய்த் தங்களுக்குப் பயனின்றிப் போவாரே என வெள்ளையர் பலர் வருந்தினர். வேறு விதமாக நீகிரோவர் திருந்தக்கூடும் என்று நினைக்க அவர்களால் இயலவில்லை. ஆனால், புக்கர் ஊருராய்ச் சுற்றிப் பார்த்து, மக்களின் மிக்க எளிமை வாய்ந்த நிலையைத் தெளிவாக அறிந்தனராகலின், அப்பள்ளிக்கூடத்தில்