பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

உழைப்பால் உயர்ந்த ஒருவர்



முதலில், டஸ்கிகியில் முப்பது மாணவரே சேர்ந் திருந்தனர். வாரந்தோறும் எண் பெருக, ஒரு மாதத்திற்குள் ஐம்பது ஆயிற்து. பதினைந்து வயதுக்கு மேற்பட்டவரும், சிறிதேனும் முன்னரே கல்வி பெற்றிருந்தவருமே இப்பள்ளியிற் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். நாற்பத்தைந்து வயதுள்ள பெரியாரும் மாணவராயினர். ஆசிரியர் சிலரும் மாணவராய் வந்து சேர்ந்தனர். இவர்களிற்பலர் கைத்தொழில் செய்யாது வாழ்நாளை இன்பமாகக் கழிக்கும் நோக்கத்துடன் வந்தவர். அவரெல்லாம் புக்கர் கொடுக்க நினைத்திருந்த பெற்றியை அறிந்திலர் போலும் !

அதனாற்றான், புக்க தோட்டத்திற் சற்று நேரம் வேலை செய்யுமாறு. கூறிய பொழுது அவர்கள் தயங்கினர். புக்கரோ. அரும்பாடு பட்டுப் பழைய தோட்டம் ஒன்றை விலைக்கு வாங்கியிருந்தார். அது பெரிய தோட்டமாயினும், அழிவிலைக்கு கிடைத்தது.ஐந்நூறுடாலர் அதற்குச் சொற்ப விலையேயாயினும், அப்பணத்துக்குத்தானும் புக்கர் எங்குப் போவார் ? இருநூற் றைம்பது டாலர் ஹேம்டன் பண்டாரத்தாரது சொகந் தப் பணத்திலிருந்து கடன் வாங்கிக்கொண்டு உடனே செலுத்தினர். மற்ற இருநூற்றைம்பது டாலரைஓராண்டுத் தவணையிற் கொடுப்பதாகச் சொல்லித் தோட்டத்தை வாங்கிவிட்டார். தோட்டத்தில் இருந்த-