பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையின் அரிய தொண்டு

55

குதிரை நிலையமுங் கோழியறையும் பாடஞ்சொல்லிக் கொடுத்தற்குப் பயன்பட்டன. பள்ளிக்கூடமே அத் தோட்டத்திற்கு மாற்றப்பட்டது. அறைகளை எல்லாஞ் சுத்தம் செய்த பிறகு புக்கர் தோட்டத்தைக் கொத்தி ஏதேனும் பயிர் செய்ய எண்ணினார். அவ்வெண்ணத்தை மாணவர் அறிந்த பின், அவருட்பலரது முகத்தைப் பார்க்க வேண்டுமே இதற்குத்தானா இங்கு வந்தோம் ' என்று நினைத்தார் சிலர். கல்விக்கும் கலப்பைக்கும் ஏது தொடர்பு? எனக் கேட்டார் சிலர். முன்னரே ஆசிரியராய் இருந்த தாம் தமது மேன்மையை இங்ங்னம் போக்கிக்கொள்வதா என வினவினர் சிலர். புக்கர் மாலைதோறும் மண்வெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு தோட்டத்துட்புகுவார். மாணவர்கள் தங்கள் ஆசிரியர் வேலை செய்தற்கு அஞ்சவும் இல்லை : வெட்கப்படவும் இல்லை என்பதைக் கண்டவுடனே, ஒருமித்து ஆர்வத்துடன் வந்து உழைப்பாராயினர். இருபது ஏக்கரா நிலம் இப்பொழுது பண்படுத்தப்பட்டுப் பயிரையும் தாங்கி நிற்பதாயிற்று

இதற்கிடையே, ஒலிவியா அம்மையார் கடனை அடைக்கப் பெரிதும் முயன்று பணஞ்சேர்க்கத் தொடங்கினார். அவர் டஸ்கிகியில் வீடுதோறுஞ் சென்று பள்ளிக்கூடத்திற்காகக் கிடைத்ததைப் பெற்றார். பணியாரம், கோழிக்குஞ்சு, ரொட்டி, குருவி முத-