பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

அதற்குப் பதினாறு ஆண்டுகட்கு முன்னால் நீகிரோவர்க்குக் கல்வி சொல்லிக்கொடுக்கும் எவனும் தண்டிக்கப்பட்டிருப்பன் என்பதை நினைத்துப் பார்த்தால், உலகில் இவ்வளவு பெரிய மாறுதல் - இத்துணையளவு விரைவில் ஏற்பட்ட நாடுகள் தவச்சில என்பது தோன்றும்.

கட்டடம் முடிவதற்குள் புக்கர் முதலியோர் எவ்வளவு துயரமுற்றனர் என்பது நாமெல்லாம் எளிதில் அறிதல் முடியாது. பல வேளைகளிற் கடன் பத்திரங்களைத் தீர்க்க வேண்டிய நாட்களில் அவற்றிற்கு வேண்டிய பணம் கையில் இல்லாமலும், இனிக் கட்டட வேலையை எப்படி நடத்துவது என்று அறியாமலும், ஒவ்வோர் இரவும் தூக்கமின்றிப் படுக்கையிற் புரண்டு புரண்டு புக்கர் துயரமுற்றார் என்று அறிகிறோம். மேலும், செய்யத் தொடங்கிய அச்செயலை முற்றுறச் செய்யின், நீகிரோ வகுப்பாருடைய மேன்மை புலப்படும் ; செய்யாவிடின், அவ்வருக்கத்தார் எல்லாம் அவமதிக்கப்படுவரே என்ற எண்ணம் வேறு, புக்கரை வருத்தி வந்தது. புக்கர் சலியாது பலரிடம் சென்று சிறு சிறு கடன் வாங்கிப் பெருங்கடனை அடைத்த வேளைகள் பல. ஆனால், ஒன்றை நன்றாக அவர் மேற்கொண்டதனாலேயே வெற்றி பெற்றார். 'நாணய மென்பது முதல் என்பதாக நினை,' என அவர்