பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையின் அரிய தொண்டு

61

அறிவுறுத்தப்பட்டிருந்தவாறே, நாணயம் தவறாது குறித்த பணத்தைக் குறித்த காலத்தே கொடுத்து வந்தார். ஆர்ம்ஸ்டிராங்கு என்பவர் தாம் நெடுநாள் சேர்த்து வைத்திருந்த பொருளனைத்தையும் ஒரு நாள் புக்கருக்குத் தந்துதவினார். அதுவும் கட்டடத்திற்குப் பயன்பட்டது.

இதனிடையே 1882-ஆம் ஆண்டல், பேனி ஸ்மித்து (Miss Fannie Smith) என்ற பெண்ணைப் புக்கர் மணந்துகொண்டார். அவரது இல்லம் மற்றை நான்கு ஆசிரியருக்கும் தங்க இடம் தருவதாயிற்று. அவர் மணந்த பெண்ணும் ஹேம்புடன் கலாசாலையிற் பட்டம் பெற்றவள் : ஆனதால், புக்கருக்குப் பல வழிகளில் உதவி புரிந்தாள். போர்ஷியா வாஷிங்குடன் (Portia M. Washington) என்ற ஒரு பெண் மகவையும் தன் கணவரையும் விட்டு, 1884ல் அவர் விண்ணோர்க்கு விருந்தாயினர். புக்கருக்கு இது துயர் தாராது இருந்திருக்குமோ?

கட்டட வேலை செய்து வரக்கால், புகரும் சில கடுஞ்சோதனைகள் வந்தன. அவர் கட்டடத்திற்கு வேண்டிய செங்கல்லிற்காகச் சூளை போட உறுதி கொண்டார். சூளை வேலை எளியதொன்றன்று. மட்குழியிற் பல மணி நெரம் முழங்கால் வரை மண்ணோடு