பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையின் அரிய தொண்டு

63

டிற்குள் வந்துவிட்டது. “முயற்சி திருவினையாக்கும்,” என்பது எந்நாட்டிற்கும் ஏற்ற உண்மையன்றோ?

இங்ஙனம் கற்கள் அமைத்து விற்று வந்ததால் நீகிரோவர்க்கும், வாங்க வந்த வெள்ளையர்க்கும் நட்பு ஏற்படத் தொடங்கிற்று. நீகிரோவர் படிப்பினால் உதவியற்றவராவர் என்ற எண்ணம் போய், தமக்கெல்லாம் பேருதவியாளராய் உள்ளார் என்ற எண்ணம் எழலாயிற்று.

இன்னும் சில கைத்தொழில்களும் தொடங்கப்பட்டன. கலாசாலைக்கு வேண்டிய சவாரி வண்டிகள், பாரவண்டிகளெல்லாம் அங்கே செய்யப்பட்டன. சில நாளில், விலைக்கு விற்கும் பொருட்டுப் பற்பல வண்டிகள் உண்டாக்கப்பட்டன. பக்கத்திலிருந்த மக்கள் வாங்கிக்கொண்டு, கலாசாலை பயனளிப்பதைக் கண் கூடாகக் காணலுற்றார்கள்.

கைத்தொழில் செய்ய விருப்பமில்லாத மாணவர் பலர் பெற்றோர்க்கு முறையிட, அவரெல்லாம் புக்கருக்கு எழுதிக் கூக்குரல் எழுப்பினர். புக்கரோ, கைத் தொழிலின் சிறப்பை நன்குணர்ந்தவர். அதில் ஊதிய மன்றி அழகும் பெருமையும் இருப்பதாகவே அவர் கூறி வந்தார். பழைய முறையிலே கைத்தொழிலைப் புரியுமாறு அவர். கூறினாரல்லர். காற்று, நீர், நீராவி,{