பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையின் அரிய தொண்டு

67



ஆனால், புக்கருக்கு இன்னும் வருத்தம் இருந்தே வந்தது. மாணவர்க்கு உண்டிச்சாலை அமைக்கப்பட்டுவிட்டதேயொழிய, அவரெல்லாம் உறங்குதற்கு வேண்டிய நலங்கள் இயற்றப் பெறவில்லை. மாணவர்கள் மாதந்தோறும் எட்டு டாலர் உண்டிக்கெனக் கொடுக்கக் கடமைப்பட்டவர்கள். அதைத் தவிர அறைக்கென்றும். குளிர் காய விறகுக்கென்றும், வண்ணானுக்கென்றும், வேறு வரிகள் இல்லை. எட்டு டாலரிற் பெரும்பகுதியை அவரவர் கலாசாலையிற் செய்யும் வேலைக்கு ஏற்றாற்போல வரவு வைக்கப் பெறுவர். இஃதன்றி, பொருளுடைய மாணவரிடத்திலிருந்து ஆண்டிற்கு ஐம்பது டாலர் வீதம் கல்வி வரி வாங்கப்பட்டே வந்தது. ஆனால், இச்சிறு தொகைகளைக்கொண்டு உண்டிச் சாலையைத்தானும் நடத்துவது இயலாதிருந்தது. படுக்கை நலமின்றிப் பல மாணவர்கள் குளிர்னால் தவித்தனர். போர்த்திக் கொள்ளப் போதிய சால்வைகளே அளிக்க முடியவில்லை என்றால், படுப்பதற்குப் பலகைகளும் மெத்தைகளும் அளிப்பது யாங்ஙனம்? புக்கர் குளிர் மலிந்த இரவு பலவற்றுள் தம் மாணவரின் துயரத்துக்கு இரங்கி உறக்கங் காணாது இருந்தனர். சில வேளைகளில், நள்ளிரவிற் புக்கர் எழுந்து மாணவர் விடுதியை அடைந்து, அவருக்கெல்லாம் ஆறுதல் சொல்லி