பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

பட்ட வழிபாட்டு நிலையந் திகழுங் காலம் வந்துவிட்டது. கலாசாலைப் புத்தகங்களை வைக்க இடமின்றி இன்னலுற்ற காலம் அகன்று, இருபதினாயிரம் டாலர் செலவில் கார்நிஜி (Mr. Andrew Carnegie) என்ற செல்வரது உதவியாற்கட்டப்பட்ட பெரும்புத்தக நிலையம் ஒன்று திகழுங் காலம் வந்துவிட்டது.

இவையனைத்திற்கும் புக்கர் செய்து வந்த தொண்டே காரணம். நிதி குறைந்தவர் நல்கிய காசுகள் எல்லாம் பொற்குவை ஆயின: மாதா கோவில்களிலிருந்தும், ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிகளிலிருந்தும், கிறிஸ்தவ சங்கங்களிலிருந்தும் கிடைத்த செப்புக் காசுகளும் நிக்கற்காசுகளுஞ் சேர்ந்து, பெரிய பெரிய குவியல்ஆயின.

அலபாமா மண்டலம் முதலிற் கொடுத்து வந்த இரண்டாயிரம் டாலரை மூவாயிரமாக்கிப் பின்னரும் பெருக்கிற்று. ஜான் சிலேட்டர் (Slater) நிதியிலிருந்தும், பீபாடி (Peabody) நிதியிலிருந்தும் ஆயிரம், ஐந்நூறு என டாலர்கள் வரத்தொடங்கிப் பின்னும் பல்கின. இவையெல்லாம் டஸ்கிகீக் கலாசாலையின் முன்னேற்றத்திற்கே செலவிடப்பட்டன.

1884-ஆம் ஆண்டில், அதாவது டஸ்கிகீக் கலா