பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6. சொல் வன்மை


புக்கர் வாஷிங்குடன் மேல் வர்ஜீனியா சம்ஸ்தானத்தின் தலைநகராகச் சார்லெஸ்டன் என்னும் ஊரே கொள்ளப்பட வேண்டும் எனப் பல்லிடங்களிற் பேசிய பொழுதே அவரைப் பலர் அரசியற்றுறையில் இறங்குமாறு கேட்டதற்குக் காரணம், அவரது சொல் வன்மையே. பின்னர், ஆர்ம்ஸ்டிராங்கு என்பாரோடு வடதேசத்தே சுற்றுப் பிரயாணம் செய்த காலத்திற் பற்பல இடங்களில் அவரது சொல் வன்மை வெளிப்பட்டது. ஆர்ம்ஸ்டிராங்கு அவருக்கு ஓர் அறிவுரை பகர்ந்திருந்தார். பொது மக்களுக்குச் செய்யும் சொற்பொழிவுகளில் சொல் ஒவ்வொன்றிற்குங் கருத்து ஒவ்வொன்று இருக்க வேண்டும் என்பது அது. அவ்வறிவுரையைப் புக்கர் பின்பற்றினார். வடதேசத்துக் கூட்டங்களில் ஒன்றினுக்கு வந்திருந்த பெரியார் ஒருவர் புக்கரைக் 'கல்விச் சபையின் ஆதரவிற் பேசுமாறு மேடிசன் (Madison) என்ற ஊருக்கு அழைத்தார்.

புக்களும் அவ்வழைப்பிற்கு இணங்கி, மேடிசன் என்ற ஊரிற் பேசும்பொருட்டுச் சென்றார். ஏறக்குறைய நாலாயிரம் மக்கள் கேட்க வந்திருந்தார்கள். அவருள் அலபாமாவிலிருந்தும் டஸ்கிகீயிலிருந்தும் வந்தவர் சிலருங் காணப்பட்டனர். வெள்ளையர் பலர்