பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல் வன்மை

81

லது என்று எண்ணியிருந்த நிலையில், 1863-ஆம் ஆண்டில் அட்லாண்டா (Atlanta) என்ற ஊரிற் கிறிஸ்தவத் தொண்டரது மாபெருங்கூட்டமொன்றில் அவரைப் பேசுமாறு அழைத்தார்கள். அவர் பேச்சு ஐந்து நிமிட நேரத்தில் முடிக்கப்பட வேண்டும் என்றுஞ் சொல்லப்பட்டது. டஸ்கிகீயில் தாம் செய்து வரும் வேலையைக் குறித்துக் கூறுவதற்கும், இரு திறத்தாரும் ஒற்றுமையாய் இருக்க வேண்டியதன் காரணத்தை அறிவுறுத்து தற்குமாகவாவது போக வேண்டும் என்ற எண்ணம் புக்கருக்கு உண்டாயிற்று. ஆனால், அவ்வமயம் பாஸ்ட்னில் அவருக்கு வேலை இருந்தது. இரண்டாயிரம் மைல் தூரஞ்சென்று அட்லாண்டாவை அடைந்து அரைமணி நேரத்துக்குள்ளாக, ஐந்து நிமிடச் சொற்பொழிவை முடித்துக்கொண்டு, பின்னர் ஒரு மணி நேரத்தில் மீண்டும் பிரயாணத்தை மேற்கொண்டு பாஸ்டன் வந்து, சேர வேண்டிய நிலையில் அவர் இருந்தார். எனினும், தாழாது அவ்வூர்ச்சென்று சொற்பொழிவை ஆற்றினார். தெற்கும் வடக்குமிருந்து வந்து கூடியிருந்த இரண்டாயிர வெள்ளையர்களும் அச்சொற்பொழிவைப் போற்றினார்கள். அட்லாண்டாத் தேசத்துச் செய்தித் தாள்களும் அதனைப் பாராட்டின.

1895-ஆம் ஆண்டில், புக்கருக்கு மற்றோர் அழைப்பு வந்தது. அஃது அட்லாண்டா எல்லையில்6