பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

வாழ்ந்த குடிகளுட்சிறந்தாரிடமிருந்து வந்தது. அதன்படி, புக்கர் இருபத்தைந்து பேர் கொண்ட வாரியம் ஒன்றனுள் இடம் பெற்றுக் 'காங்கிரஸ்' முன் சென்று முறையிட வேண்டியவராய் இருந்தார். அவ்வாரியத்துட் புக்கரைச் சேர்த்து மூவரே நீகிரோவர் இருந்தனர். அவரெல்லாரும் போய்க் காங்கிரஸ்முன் உரைக்க வேண்டியதை உரைத்தார்கள், புக்கரும் பதினைந்து நிமிடம் பேசினார். அட்லாண்டா வாரியமும் காங்கிரஸ் வாரியமும் புக்கரைப் போற்றின. அவர் சென்ற தூது வெற்றியுற்றது.

அத்தூதின் பயனாய் அட்லாண்டாவின்கண் பெரியதோர் பொருட்காட்சி அமைக்கப்பட்டது. அதில், நீகிரோவர்களும் வெள்ளையர்களும் செய்த சிறந்த பொருள்களெல்லாம் வைக்கப்பட்டிருந்தன. டஸ்கிகி, ஹேம்புடன் கலாசாலைகளிலிருந்து வந்திருந்த பொருள்கள் பெரிதும் போற்றப்பட்டன. அக்காட்சியை ஒட்டி நடந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக, நீகிரோவருள் ஒருவர் ஒரு நாள் திறப்புச் சொற்பொழிவு ஆற்ற வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டிருந்தது, அந்தப் பணி புக்கரது ஆயிற்று. தேசியச் செய்திகளைப் பற்றிப் பேசும் மேடைகளில், தென்னுட்டு வெள்ளையர் பேசும் மேடையின்பாலே நீகிரோவர் ஒருவரும் பேசுமாறு அழைக்கப்பட்டது. அதுவே முதன்முறையாகும்.