பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

புகை வண்டி நிலையங்களில் மக்கள் பற்பலர் அவரை வந்து பார்த்துச் சுட்டிக் காட்டிப் பேசிக்கொண்டார்கள். அட்லாண்டா சேர்ந்ததும் அறிஞர் பலர் வந்து அவரை வரவேற்று நின்றனர்.

அட்லாண்டாச் சபையின்கண் மக்கள் நிரம்பியிருந்தார்கள். அன்று, பேசும் பொறுப்பு எளியதொன்றன்று. பல பத்திரிகைகள் புக்கர் யாது சொல்வார் என எதிர்பார்த்துக் கூறத்தொடங்கின. எங்குப் பார்த்தாலும் அவர் எப்படிப் பேசுவார் என்பதைப் பற்றியே பேச்சு. பிதற்றி, வரவழைத்தோர் வெட்கப்படுமாறு செய்ய மாட்டாரா என நினைந்து நின்றாரும் உளர். இரு நிறத்தாரது ஒற்றுமையும் இவரது பிரசங்கத்தைப் பொறுத்திருக்கிறது. அதனைச் சென்று காண வேண்டும் என வெளியூரினின்றும் வந்திருந்தோர் பலர். தென் வெள்ளையர், வடவெள்ளையர், நீகிரோவர் எல்லாரும் வந்திருந்தார்கள். ஒருவருக்கும் இழிவு வாராது பேச வேண்டிய பொறுப்பு மிகப் பெரியதொன்றே. புக்கர் முதல் நாளிரவு உறங்கினாரல்லர்.

கூற வேண்டியதை மீண்டுங் காலையில் ஒரு முறை பார்த்துக்கொண்டார் : கடவுளை வணங்கி, அவரது அருளைக் கோரிப் புறப்பட்டார். பிரசங்கம் புரியப் போகுமுன் எப்பொழுதும் அவர் கடவுளை இறைஞ்-