பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. இளமையும் இன்னலும்

சற்றேறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே அமெரிக்கா (America) என்னும் தேசத்தில் சில சாதியார்கள் சென்று குடியேறினார்கள். அவர்களுள் ஆப்பிரிக்காவிலிருந்து சென்றவரை நீகிரோ (Negro) சாதியார் என்பார்கள். அச்சாதியார் சுமார் இருநூறு ஆண்டுகள் அடிமைகளாய் அந்நாட்டில் வருந்தி வேலை செய்து, சொல்ல முடியாத துயரத்தையும் துன்பத்தை யும் அடைந்தவராய் இருந்தனர். அவ்வடிமைகள் எல்லாம் அடிமைத்தளையினின்றும் சில பெரியாருடைய கருணையால் விடுவிக்கப்பட்டார்கள். அப்பெரியாருள் ஒருவர் ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln) என்பவர். அவர் அமெரிக்காத் தேசத்து ஐக்கிய மாகாணங்களின் தலைவர் பதவியை ஏற்றுச் சில ஆண்டுகள் ஆனவுடன், ஒரு கட்டளை பிறப்பித்தார். அக்கட்டளைப்படி அடிமைகளெல்லாம் அந்நாள் தொட்டு எப்பொழுதும் சயேச்சையுடையவர்கள் ஆனார்கள். அந்த நன்னாளே கி. பி. 1863-ஆம் ஆண்டு, சனவரி மாதம், முதல் தேதி. இந்த நன்னாளுக்கு முன்னால் அவ்வடிமைகள் பட்ட துயரத்துக்கு அளவில்லை.

புக்கர் வாஷிங்குடன் ஓர் அடிமையாகவே பிறந்தார். அஃதாவது, அவர் ஓர் அடிமைப் பெண்ணுக்கு