பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையின் பிற்பகுதி

91

செய்யுங் கடமைகளுக்கு நல்லுதவியாய் இருப்பார். எம்மெட் ஸ்காட்டு (Emmet Scott) என்ற செயலாளர், புக்கர் செல்லும் ஊர் யாண்டிருப்பினும், அவ்வூரில் இருந்தபடியே டஸ்கிகீயில் நடக்குஞ் செய்திகளின் விவரங்களையெல்லாம் புக்கர் அறிந்துகொள்ளுமாறு அறிக்கைகள் அனுப்புவார்.

கலாசாலையின் ஒன்பது பகுதிகளின் தலைவர்கள் ஒன்பது பேர்களும் வாரம் இரு முறை கூடி நிருவாகத்தைப் பற்றி எண்ணுவர். அறுவர் உறுப்பினராயுள்ள பொருளாதார வாரியத்தார் வாரம் ஒரு முறை கூடி அவ்வவ்வாரத்தின் செலவுகளை அறுதியிடுவர். மாதம் ஒரு முறைக்குக் குறையாமல் ஆசிரியர் அனைவருங் கூடி ஆலோசிப்பதுண்டு.

புக்கர் நாடோறும் தாம் முடிக்கவேண்டிய கடிதப் பொறுப்பையும் மற்றவற்றையும் அலுவலறையை வீட்டுப் புறப்படுமுன் முடித்துவிட்டே செல்வார். அன்றையபாடு அன்றன்றே நிகழ்வது எத்துணைச் சிறப்புடைத்து! அவர் வேலைக்கு அடிமையாகாது வேலையை ஆளுந்திறமுடையவர் ஆனார். அதற்குக் காரணம், அவருக்கு அவரது வேலையின்பால் இருந்த அன்பே. காலையில் அவர் வேலையைத் தொடங்கும் பொழுது,