பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

கலாசாலையில் எல்லாம் இனிது முடியுமென்று நினைத்துத் தொடங்குவதுண்டு. ஆனால், எதிர்பாராத இடுக்கண்ணால் இன்பமின்றிப் போகவுங்கூடும் என்றும், அவர் இடையிடையே எண்ணுவார். கலாசாலையில் எங்கேனுந் தீப்பிடிக்கவுங்கூடும். ஏதேனும் புகைந்து போகவுங்கூடும். . யாரேனும் தம்மைத் திட்டவுந் திட்டு வர் என்றெல்லாம் நினைப்பது அவர் இயல்பு. ஆதலின்,

"இன்பம் விழையான் இடும்பை யியல்பென்பான்
துன்பம் உறுத லிலன்."

என்றதற்கேற்ப, அவர் கழிபெருந்துன்பமுற்றாரல்லர். மிகப் பெரியதொரு செய்தியைக் குறித்து முடிவு பண்ண வேண்டுமானால், அவர் அதனைச் சிந்தையில் வைத்து ஓரிரவு உறங்கி, ஏதேனும் வழி தெரிகிறதா எனப் பார்ப்பார். அன்றேல், மனைவியோடும் நண்பரோடும் கலந்து சூழ்ந்த பின், முடிவு செய்வார்.

புத்தகங்கள் படிப்பதில் அவருக்கு மிக்க விரும்பம் உண்டு. ஆனால், பொருளொடு புணராப் பொய்ம்மொழியை எடுத்துப் பார்ப்பதில்லை. செய்தித்தாள்களும் பெரியாருடைய வரலாறுகளுமே அவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்வன. ஆபிரகாம் லிங்கனைப் பற்றிய புத்தகங்களையும் துணுக்குகளையுங் கட்டுரைகளையும் அவர் படித்திருந்தார் என அறிகின்றோம். {{hws|பெரும்பா|பெரும்பாலான{{