பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

லண்டன், பாரிஸ் (Faris) முதலானவற்றை வானுல்கை ஒப்ப மதித்து வந்தார். இப்பொழுது நாம் ஐரோப்பாவிற்குச் செல்வது உண்மையேயோ என ஐயமுறுவாராயினர். இளமையிலிருந்து ஓய்வு என்பதை அறிந்திலா அவர், இப்பொழுது மூன்று அல்லது நான்கு மாதங்களை வேலையின்றி எப்படிக் கழிப்பது என இனப்பாராயினர். 1899 மே மாதம் 10-ஆந்தேதி அவர் நியூ யார்க்கிலிருந்து புறப்பட்டார். உடன் அவர் மனைவியாருஞ் சென்றார். பலர் வழியனுப்பினர். கப்பலில் மாலுமி முதல் சிறு வேலையாள் வரை எல்லாரும் புக்கரிடத்து அன்பு காட்டினர். புக்கர் கப்பலிலிருந்த பத்துப் பன்னிரண்டு நாளிலும், நாளொன்றுக்குப் பதினைந்து மணி நேரம் தூங்கினர். நிலத்திலிறங்கிய பின்னரும். அங்ஙனமே ஒரு மாதம் உறங்கினர். முன்னெல்லாம் காலேயில் எழுந்தவுடன் எத்தனை அலுவல்கள் இருந்தன எத்தன ஊர்களுக்கு ஓடவேண்டியிருந்தது! எத்தனை பேரைப் பார்க்க வேண்டியிருந்தது! எத்தனை சொற்பொழிவுகளுக்குக் குறிப்பெழுதிப் பேச வேண்டியிருந்தது ஓர் இரவில்தானே மூன்று இடத்தில் மாறி மாறிப் படுக்க வேண்டிய அவசியம் பிரயாணத்தால் ஏற்பட்ட காலம் முன்னெல்லாம் உண்டல்லவா? இப்பொழுது காலையில் எழுந்தவுடன், அப்படியெல்லாம் வேலைகள் இல்லையே எனப் புக்கர் நினையாமல் இருந்திருப்பாரோ?