பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையின் பிற்பகுதி

97

பெல்ஜியத் தேசத்தில் ஆண்ட்வெர்ப்பு (Antwerp) என்ற ஊரை வங்கம் அடைந்தது. புக்கர் அவ்வூரைச் சுற்றிப் பார்த்த பின் ஹாலண்டு (Holland) என்ற தேசத்துக்குப் போய், ராட்டர்டேம் (Rotterdam), ஹேகு (Hague) முதலான ஊர்களைச் சுற்றிப் பார்க்குங்கால், ஆங்கெல்லாம் வரவேற்கப்பட்டார் : ஹாலண்டு தேசத்து உழுதூண் வாழ்க்கையையும் ஆடுமாடுகளின் செழிப்பையுங் கண்டு களிப்புற்றார்.

மீண்டும் பெல்ஜியம் போய், பிரஸ்ஸல்ஸ் (Brussels) வாட்டர்லூ முதலான இடங்களையும் பார்த்துவிட்டுப் புக்கரும் அவர் மனைவியாரும் பாரிஸ் சென்றார்கள். பாரிஸ் பல்கலைக் கழகத்திற் புக்கர் ஒரு பிரசங்கம் செய்யுமாறு அழைக்கப்பட்டதற்கு இணங்கிப் பேசினார். இன்னும் பற்பல அழைப்புக்கள் வந்தன. ஆனால், புக்கர் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டால் தாம் வந்ததன் நோக்கம் கெட்டுவிடுமே என்ற எண்ணத்தால் இரண்டொன்றையே ஏற்றுக்கொண்டார்.

பாரிஸிலிருந்து லண்டன் மாநகரஞ் சேர்ந்தார். ஆண்டும் பற்பலர் அவரைப் பேசவும் உண்ணவும் அழைத்தனர். சிற்சிலவற்றையே அங்கும் ஏற்றுக் கொண்டார். எசக்ஸ் மண்டபத்தில் (Essex Hall) ஓர் அருமையான பிரசங்கஞ் செய்தார். அதனை

7