பக்கம்:ஊசிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வது பத்தியை முழுதுமாக எடுத்துவிட்டால் கவிதை இறுக்கமாக இருந்திருக்கும்.
மீரா: பதவிக்கு வருகிறவர்கள் எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்கிறார்களே தவிரச் சிவப்பு நாடாவை யாரும் நீக்குவதாகத் தெரிய வில்லை என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லும் உத்தியைக்கொண்டு உணர்த்த முயன்றிருக்கிறேன்.
ரகுமான்: அப்படி என்றால், கண்ணன் சொல்கிறான் என்று முதலில் போட்டது போலவே 'மூன்றாம் பத்தியையும் நான்காம் பத்தியை யும் வெவ்வேறு ஆட்கள் சொல்வதுபோல் தலைப்பிட்டு எழுதியிருந்தால் இது இன்னும் பளிச்சென்று தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நான் அவன் நண்பன்' என்பதுகூட ரொம்ப நீளமாக இருக்கிறது. மற்ற கவிதைகளோடு 'Symmetrical' அமையவில்லை.
மீரா: நூல் முழுவதற்கும் 'Epilogue' ஆக இதைச் சேர்த்திருக்கிறேன். அதனால், மற்றவற் றோடு இது 'Symmetrical'ஆக அமைய வேண்டிய அவசியமில்லை.
பாலு: எந்தச்சந்த உணர்வும் இல்லாமல் இன்றைக்கு எழுதப்படுகிற புதுக்கவிதைகளுக்கு நடுவே 'ஊசிகள் அகவல் ஒசையில் அமைந்திருப் பதை நான் வரவேற்கிறேன். இந்தச் சந்தம் கவிதைப் பொருளுக்குக் கைகொடுப்பதால் எனக்குப் பிடிக்கிறது. கத்தி வந்தது டும்... டும்', உறுமின் வருமளவும்... , 'கல் சிறந்த தமிழ்நாடு', 'உயிருள்ள பத்திரிகை" போன்ற தலைப்புக்கள் கவிதைக்கு மேலும் நயம் கூட்டுவதாக நினைக்கிறேன். சில புகழ்பெற்ற அரசியல் முழக்கங்கள், இலக்கியத்-

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/10&oldid=978631" இலிருந்து மீள்விக்கப்பட்டது