பக்கம்:ஊசிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எண்ணிக்கையை நீர் கொஞ்சம் குறைப்பீர்
கொஞ்சம் ..... ”

என்று குத்திக்காட்டுகிறது. கவிஞர் மீரா போன்றவர்கள் முப்பதாண்டுகளுக்கு முன்பே சமூகப் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து, அம்பலப்படுத்தித் தடம் பதித்தனர். ஆயினும் பிற்காலக் கவிஞர்கள் இந்தத் தடம் மறந்து சூனிய வெளியில் சஞ்சரித்து இன்றுவரை வெறுமையைத் தரிசித்து வருகின்றனர். புதுக்கவிதையில் தடம்பதித்த வானம்பாடிகளும், மேத்தா, அப்துல் ரகுமான், பாலா, கந்தர்வன் போன்றவர்கள் அந்தப் பதாகைகளைத் தொடர்ந்து ஏந்திப் பவனி வருவது இங்கு நினைவுகூரத்தக்கது.

கல்வி வியாபாரமாகி தற்போது சூதாட்டமாய் கொடிகட்டிப் பறக்கிறது. இதை துவக்க காலத்திலேயே கல்வி சிறந்த தமிழ்நாடு, கவிதை மூலம் மீரா அம்பலப்படுத்தினார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கூறும் தொகைப் பட்டியல் இன்று நமக்கு அற்பமாய் தெரிகிறது. ஆயினும் தமிழக அரசியல் அரங்கம் மட்டும் மீரா கூறுவது மாதிரி -

"சினிமா அரங்கில்
அரசியல் கூத்து:
அரசியல் மேடையில்
சினிமாச்சண்டை
ஒரே கல்லில்
இரண்டு மாங்காய்...'

என்று தொடர்கதையாய் நீள்கிறது.

இந்த ஊசிகளை வாசியுங்கள். சமூகப் பிரச்சனை குறையும், மக்கள் பிரச்சனையும் எப்படிக் கவிதைகளாக்க முடியும் என்பதை அறிவீர்கள்.

மதுரை

எஸ்.ஏ. பெருமாள்
மாநில செயற்குழு உறுப்பினர், தமுஎச.


13
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/15&oldid=946452" இலிருந்து மீள்விக்கப்பட்டது