பக்கம்:ஊசிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வறுமையே
வெளியேறு



எட்டு மாதமாய்
எங்கள்தலைவர்
தெருவில் நின்று
செழிக்கச் செய்தார்
முழக்கம்....
வறுமை
வெளியேறிற்றா
விரைவாய்...... ?



நேற்று
செட்டியார் வீட்டுத்
திருமணப் பந்தியில்
எதுவும் பேசாது
எங்கள்தலைவர்
எட்டி உதைத்தார்....
வறுமை,
வேக வேகமாய்
வெளியே றிற்று -
பரட்டைத்தலையும்
எலும்பும் தோலும்
கிழிந்த கந்தையுமாக...... !

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/20&oldid=1013554" இலிருந்து மீள்விக்கப்பட்டது