பக்கம்:ஊசிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கொ(டு)த்து வைத்தவர்


என்னருந்தமிழ்தாய்
ஈன்ற மக்களே!
உங்களைப் போல
உலகில் யாரே
கொடுத்துவைத்தவர்......!

சினிமா.அரங்கில்
அரசியல் கூத்து;
அரசியல் மேடையில்
சினிமாச்சண்டை.

ஒரேஒரு கல்லில்
இரண்டு மாங்காய்......

உங்களைப் போல
உலகில் யாரே
கொடுத்து வைத்தவர்

68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/70&oldid=1013605" இலிருந்து மீள்விக்கப்பட்டது