பக்கம்:ஊசிகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இடைவேளை






பள்ளி திறந்தது;
அ-சொல்லிக் கொடுத்தோம்


அப்புறம்......
அறுவை சிகிச்சைக்கு

ஆளைப் பிடிக்க
வலையை வீசப் போனோம்


அப்புறம்...
சீனி அட்டையைத்
தெருத் தெருவாக
விநியோகிக்கப் போனோம்.


அப்புறம்...வாக்குப் போடும்
மன்னர் தொகையைக்
கணக்கெடுக்கப் போனோம்


தேர்வு வந்தது;
ஃ-சொல்லி முடித்தோம்.

82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/84&oldid=1013618" இலிருந்து மீள்விக்கப்பட்டது