பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டுசு

ஊன்றுகோல்

வடிவேல் முருகா வாய்த்த நின் ஆணையை
அடியர் இவர்க்கும் அருளினை என்னே!"
என்றுபா ராட்டி இருமொழிப் புலவரின்

ஒன்றும் முகத்தை உற்று நோக்கி;
190

'முழுமுதற் பொருளாம் முருகன் பொருள்பெற
வழிசொலா திருப்பனோ? அவன் சொலும் வழியை
அடியன் இவனுக் கறைதல் ஒல்லுமோ?
என்னலும், புலவர் 'எழில்வேல் முருகன்

சொன்ன மொழிகள் துய மறையெனப்
195

போற்றத் தக்கன; பொருந்திய நெஞ்சம்
ஏற்றுளோம் ஆதலின் இசைத்தநல் வழியை
நும்மிடம் புகல இம்மியுந் தடையிலே’
என்று கூறி எதிர்வெளி நிலத்தில்

நின்ற வெள்வேல் மரத்தினைச் சுட்ட,
200

ஒன்றும் தோன்றா உளத்துட னிருந்த
சாமியை நோக்கிச் சாற்றினர் புலவர்;
வெள்வேல் முருகற்கு மிகவும் உகந்தது
வள்ளல் கைவேல் வெள்வே லன்றோ?

இம்மரம் அதன்பேர் ஏற்றுள தாதலின்
205

அம்மரம் விரும்பினன், அதனைக் காட்டி
அதன்கீழ்த் திசையில் ஆறு முழத்தில்
பதமுற ஆழந் தோண்டிப் பார்ப்பின்
பசும்பொன் அங்கே பதுங்கிக் கிடக்கும்.

எடுத்ததைத் திருப்பணி இயற்றத் தருகவன்
201

றருளிச் செய்தனன் ஆறு முகத்தான்
என்றதும் மகிழ்ச்சி ஏகிய முகத்தில்
துன்றும் வருத்தந் தோன்ற இருந்த
துறவியை நோக்கித் தொழுதகு பெரியீர்!