பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ரூஅ
ஊன்றுகோல்

தேறுதல் மொழியுஞ் செப்பினன்; அந்தக்
கலியுக வரதன் கருணை தான் என்னென 245
மலியும் உவகை மனத்தன் ஆகினேன்?
எனுமொழி கேட்டவர் இக்குழி தோண்டுதல்
இன்றியே அப்பொருள் எளிதிற் கிடைக்கலாம்
அன்றித் தோண்டினும் அப்பொருள் கிடைக்கலாம்
என்று நினைந்துளம் ஆறுதல் எய்தி, 250
"வழிபடும் முருகன் வழிதரா திருப்பனோ?
வழியென எதனை வாய்மலர்ந் தருளினன்?
எளியன் இவனுக்கியம்புக’ என்றனர்,
அடியவர் அவாவின் விரைவினைக் கண்டு,
பொடிசேர் மேனியிர் புதையற் பொருள்பெற 255
ஆறு முழத்தின் ஆழம் அமையச்
சோருத லின்றித் தோண்டுக, அதனுட்
செம்பொன் இலதேல் செய்தஅக் குழியுள்
அன்பின் வந்த அடியவன் அவனைச்
சீவன் முத்தி சேர்பயன் என்று 260
யாவரும் போற்ற ஆவியோ டிறக்கி
முறையாற் சமாதி முற்றுறக் கட்டி
இறையோற் கெழுப்பும் கோவிலும் எடுத்து
நினது கையால் நித்திய பூசையும்
இயற்றுக’ என்றோர் ஆணை யிட்டனன்; 265
முருகன் ஆணையை முடிமிசைக் கொண்டு
கருதி நடக்குங் கடப்பா டுடையேன்,
ஐய நீவிரும் ஐயுறல் விடுத்தும்
தளர்ந்து பின் வாங்குதல் தவிர்த்தும் இதனை
அங்கீ கரித்துடன் அருளுதல் வேண்டும் 270
இங்ங்னம் புலவர் இசைத்தது.இகேட்டுத்