பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்


(அறுசீர் விருத்தம் - வேறு)

முற்றாத கல்வி நலம், முழுமைபெறாக்
கவிதைவளம், முனைப்பில் நின்று
வெற்றாக ஆர்ப்பரிக்கும் பேச்சுவளம்,
வீமகவி என்ற பேரும்
பெற்றார்தாம் தனவணிகர் நாட்டகத்துப்
பெருங்கவிஎன் றெடுத்துக் கூறிச்
சுற்றாத இடமில்லை, அப்புலவர்
சுடர்மணிக்கு நண்ப ரானார்
6
“கலைமகளின் அருள்பெற்ற கவிஞன்யான்
கண்ணசைத்தால் என்முன் நிற்பாள்;
சொலுமொழிகள் கேட்டேவல் செய்திடுவாள்;
சொன்னதுதான் பலிக்கச் செய்வாள்;
புலவனென துளமகிழப் பொருள்தந்தால்
பூரித்துப் பாடல் சொல்வேன்
அலைமகளின் அருள்கிடைக்கும் தராவிடினோ
அறம்பாடித் தொலைப்பேன்’ என்பார்
7
சொன்னவெலாம் உண்மையென நம்பிநின்று
தொண்டுசெயல் தொன்று தொட்டு
மன்னிவரும் இயல்பன்ரோ? அவ்வியல்பு
மாறாத செல்வர் எல்லாம்
பன்னிவரும் வீமகவி சொல்லெல்லாம்
பலிக்குமென அஞ்சி அஞ்சி
என்னபொருள் கேட்டாலும் அவர்மகிழ
இலைஎன்னா தீந்து வந்தார்
8