பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
  • ஊன்றிய கோலின் உறுதுணை யதனால்

ஆன்றவர் தளர்வுடன் அவர்தம் மனையில்
ஈண்டிய படிகளில் இறங்குதல் காலை
65
ஆண்டுடல் வருவோர் அவர்நிலை யறிந்து
படிபடி என்றுரை பகருதல் கேட்டுப்
‘ப்டிபடி எனுமொழி பலகாற் பகர்வீர்
படிப்பதே தொழிலேன்’ என்பர் பண்டிதர்
நகைச்சுவை ததும்பக் தொடரும் நடையே.
70

  • நற்குணம் நிறைதரு நாட்டார் ஒருநாள்

கற்குடிக் கோவில் காண விழைந்த
செவ்விய மணியுடன் சேர்ந்தவன் சென்றார்
ஒவ்வோ ரிடத்தும் உறுநிலை கட்டி
அழைத்துச் செல்பவர் அவ்வுழைக் கால்கள்
75
பிழைத்திடா வண்ணம் பேருளங் கொண்டு
படிகள் இல்லா இடங்களை யுணார்த்தப்
‘படியிலை படியிலை பார்த்து வருகெனத்
தொடரும் நாட்டார் சொல்லினராக
‘அடியவர்க் கருளும் ஆண்டவன் முன்னர்ப்
80
படியிலை எனமொழி பகருதல் நன்றோ?
படிமிசை எவர்க்கும் படியளப் பவன்யார்?
இறைவன் அன்றோ?’ என்றனர் மணியார்
நிறைமகிழ் வுடனே தொழுதனற் நெடிதே.
வீர சைவத் திருமடம் ஒன்றில்
85
சீரிய விழாவொன் றோர்நாள் நடந்தது
தலைமை ஏற்றனர் தமிழ்மணிப் புலவர்
நலமுடன் விழாவும் நடந்து முடிந்தபின்
விழாவினை நடத்தியோர் விருந்து வைத்தனர்
குழாத்துடன் உண்டுபின் குறித்த இடத்தில்
90