பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துயிலச் சென்றனர் துணைவந் தவர்பால்
‘அயின்ற உணவின் ஆன்ற சுவைதான்
எப்படி அப்பன்?’ என்று வினவத்
‘தப்பிலை எனினும் வெந்தது சரியிலை’
இப்படி யுரைத்தனர்; இவரோ ‘ஆமாம்
95
சமயமும் வீர சைவம் ஆதலின்
சமயலும் வீர சைவம்’ என்றனர்
காரம் மிகுந்த குறிப்பைக் காட்ட
வீர சைவமென விளம்பினர் இவரே.
அரியக் குடியிற் சொற்பொழி வாற்ற
100
வருமிப் பண்டித மணியார் பருகக்
குவளையிற் பசுப்பால் கொடுத்தன ராகக்
குவளையுப் பாலைக் கூர்ந்து நோக்கிச்
’சிறுபாற் கடலில் சீனி வாசன்
அறிதுயில் கொள்கிறான்’ என்றனர் அவர்தாம்;
105
உடனிருந் தோரெலாம் என்றும் அறியா
திருந்திடப் பாலில் எறும்பு கிடந்ததை
அருந்தமிழ் புலவர் விளக்கிக் கூறினர்
சீனியில் வாசஞ் செய்யும் எறும்பைச்
சீனி வாசன் என்று செப்பிட
110
வியந்து நகைத்தனர் வீற்றிருந் தோரே.
திருவா வடுதுறைத் திருமட மதனில்
அருள்மிகு தலைவர் அம்பல வாணர்
இவருடன் பழகிய இனிய கேண்மையர்
அவரைத் தொழர்ழும் ஆர்வம் கூர்ந்தொரு
115
நாளிற் சென்று நயப்புடன் அணுகித்
தாளில் வீழத் தலைப்படுங் காலை
தழுவிய பிரம்பு நழுவிடத் தவறி