பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9. நட்புவளர் காதை




புலமிக்கார் மாசற்றார் கேண்மை போலப்
பூதலத்தில் யாவுளவோ? ஒன்று மில்லை
வலமிக்க வாழ்வுக்கு நட்பைப் போல
வழிசெய்யும் பொருளொன்று கண்ட தில்லை;
நலமிக்க நண்பரிலா வாழ்க்கை பாழாய்
நனிவறண்ட பாலைநிலம் போல வாகும்;
உளமிக்க நண்பருடன் பழகும் வாழ்க்கை
உயிராறாய் மலர்வனமாய் திகழ்ந்து தோன்றும். 1

பெரும்புலமை மிகுநெஞ்சில் தம்மோ டொத்த
பிறருக்கும் மதிப்பளித்துப் புகழ்ந்து போற்றி
விரும்புவது சற்றருமை; ஆனால் எங்கள்
பீடுநிறை மணிப்புலவர் தமிழ கத்துப்
பெரும்புலவர் எவருளரோ அவரை யெல்லாம்
பேணியவர் நட்பனைத்தும் பெற்றி ருந்தார்;
கரும்புநிகர் நூல்நயமும் நல்லார் நட்பும்
கதிரேசர் வளர்பிறைபோல் வளர வாழ்ந்தார். 2