பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அய

ஊன்றுகோல்

சங்கங்கள் பலவைத்துப் பெருமை பூணத்
தமிழ்காத்த பாண்டியர்கள் சென்ற பின்னர்
இங்கெங்கள் தமிழ்கிாக்கப் புலவர் என்ற
இனங்காக்க இனியதொரு சங்கங் கண்டு,
துங்கமுற அதைவளர்த்து நின்ற பாண்டித்
துரைத்தேவர், இவர்புலமைத் திறத்தைக் கண்டு
பொங்கிவரும் மகிழ்வதனாற் சங்கங் காக்கும்
புலவர்க்குள் ஒருவரென ஆக்கிக் கொண்டார். 3

தொடுக்கின்ற சொற்போரில் தோல்வி நேரின்
"துணித்தெனது தலையெடுத்து வைப்பேன்’ என்று
விடுக்கின்ற அறைகூவல் உடையார், நெஞ்சில்
விளைபுலத்துப் பெருக்குடையார், வறுமை வாழக்
கொடுக்கின்ற வாழ்வுடையார், எனினும் என்றும்
குன்றாத பெருமிதமே உடையார், எங்கும்
அடுக்கின்ற பணிவுடையார், சோழ வந்தான்
அழகியநல் லூருடையார், உடையார் என்றும் 4

எளியவர்க்குள் எளியரென விளங்குந் தோற்றம்
இலக்கணத்தில் நிகரில்லா திலங்கும் ஏற்றம்
துளியனைத்து மஞ்சாத புலமை வீரம்
துயர்கண்டு மனமிரங்கி அருளும் ஈரம்
வழிவகுக்கும் திருக்குறளின் பாட்டுக் கிங்கு
வளமான விருத்தியரைட தந்த செல்வர்
அளிமிகுத்த மலர்சூழும் சோழ வந்தான்.
அரசஞ்சண் முகனாரின் தொடர்பும் பெற்றார் 5