பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ உ

ஊன்றுகோல்


கைப்பொருள் வற்றிய காலையும் புலவர்
கற்பனை வற்றுதல் கானர்; அவருள் 30
அரசன் சண்முக னாரும் ஒருவர்;
விதை துயரினை வடித்தல் காண்டமின்!
"கடனெனுந் துரியனால் கைப்படும் ஊக்கமாம்
இடம்படும் நாட்டை இழந்து சஞ்சல
வனத்தில் மதியெனும் மனையுடன் ஐம்பொறி 35
எனப்படும் பஞ்சவர் கூட்ட மானயான்
அலைந்து திரிந்ததை அறிவீர்! நும்மைப்
பிரிந்திவண் வந்தபின் கரந்துறை வாழ்வில்
திரிந்த நேரம் திண்டுக் கல்லெனும்
விராட நகரத்து மகமதியர் எனைத்துயர் 40
உறாவணங் காத்தனர்; உயரிய செல்வர்;
இருந்த நன்செயை ஈடு வைத்துக்
கரந்துறை வாழ்வைத் துறந்து வந்துபின்
உத்தி யோக பருவமும் உஞற்றினேன்;
உரிய பதினெண் நாட்போர் ஒய்ந்தது 45
துரியனும் ஆங்கே துடைமுரிந்து வீழ்ந்தான்
ஆயினும் உயிர்தான் அகன்றிலன் எனினும்
வீயும் அந்நாள் விரைவினில் வந்துறும்
அந்நாள் வந்தபின் நன்னுால் ஆய்வெனும்
பொன்முடி சூட்டு விழாவும் பொலிவுறும் 50
இழந்த ஊக்க எழில்நா டெனதாம்;
ஒல்காச் செங்கோல் ஒச்சுங் காலை
தொல்காப் பியப்பயிர் தழைத்துத் தோன்றும்’
எனஒரு மடலில் எழுதினர் மணிக்கு;
துயர்தருந் துரியன் உயிரது தொலையக் 55
கதிர்மணிக் கண்ணன் காட்டினர் வழியே.