பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஅ

ஊன்றுகோல்இலக்கணத்தொல் காப்பியமும் அதற்குச் சான்றோர்
எழுதிவைத்த உரைகளுமோர் கடல்கோள் தன்னால்
கலக்கமுற அழியினுமே கந்த சாமி
யாரிருந்தாற் போதுமொரு கவலை யில்லை
சொலச்சொல்லி மீண்டுமவை எழுதி வைத்துத்
துயர்தவிர்வோம் எனப்புகழும் நூல்வல் லாரின்
உலப்பில தாம் தோழமையை நன்கு பெற்றோர்
உயர்நட்பிற் கிலக்கணமாய் வாழ்ந்து வந்தார். 16

நாவிரிக்கும் புகழ்மணக்கும் பொன்னி பாயுஞ்
சோழவள நாட்டாரைச் சைவம் என்னும்
பூவிளேக்கும் செழுந்தேனில் திளைப்ப தன்றிப்
புறத்துமனம் நாட்டாரைத் தமது நெஞ்சில்
பாவிசைக்குந் தமிழன்றி மற்றும் ஒன்றைப்
படரவிட மாட்டாரைப் பொய்ம்மைக் காக
நாவசைக்க மாட்டாரை அமைதி சான்ற
ந. மு. வே. நாட்டாரை நட்பாக் கொண்டார். 17

பகைமருள மேல்நோக்கித் திருகும் மீசை,
படைத்தலைவர் என நிமிர்ந்து பார்க்கும் பார்வை,
இகலறியா அரியேறு, பேசுங் காலை
இடிமுழக்கம் அவர்பேச்சு, தமிழைத் தாழ்த்தப்
பகைவருமேல் விழிசிவந்து கனலைக் கக்கப்
பாய்ந்துவரும் புவிப்போத்து, சட்ட நூல்கள்
பகர்புலவர் பாரதியார் என்று கூறும்
பசுமலையார் இவர்க்கினிய நண்ப ரானார்.

18


  • . கந்தசாமியார்-இலக் கணத்தில் வல்லாராகிய

கிண்ணிமடங் கந்தசாமியார்.