பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியக் காதை

௬௩

குலனுடையார் அருளுடையார் தெய்வம் போற்றுங்
கொள்கையிலும் மனமுடையார் மேன்மை
கொண்டார்
கலைபயிலும் தெளிவுடையார் விரும்பிக் கேட்கக்
கட்டுரைக்குந் திறனுடையார் நிறைகோ: லன்னார்
நிலமன்னையார்-மலையனையார் மலரும் ஒப்பார்
நிகரில்லா ஆள்வினையும் இயல்பான் வந்த
உலகியலோ டுயர்குணமும் ஒருங்கு பெற்றார்
ஒருகுறையும் இல்லாத ஆசான் ஆனார்.
6

காலமறிந் திடனறிந்து நூலெ டுத்துக்
கற்பிக்கச் சிறந்துழியுந் தேர்ந்தி ருந்து
நீலமணி மிடற்ருனே நெஞ்சால் வாழ்த்தி
நிரந்தினிது சொலும்பொருளைப் படித்துப் பார்த்து
மேலுமதை உளத்தமைத்து முகம லர்ந்து
விரையாது வெகுளாது விரும்பி நின்று
பாலமுதம் ஊட்டுதல்போல் கொள்வோன் கொள்ளும்
பாங்கறிந்தே உளங்கொள்ளப் பாடஞ் சொல்வார். 7

சொல்லுரைசே னாவரையம் கற்ப தற்கும்
செல்லுதற்கும் அரிதென்று வல்லார் சொல்வர்;
வல்லவரந் நல்லுரையை வடித்துக் காட்டி
மாணவர்க்கு விளக்குங்கால், மறைந்து நின்று
பல்லமயம் அவ்விளக்கங் கேட்டுக் கேட்டுப்
பாராட்டி ரா. ராக வையங் காரும்
சொல்லியது கேட்டுள்ளோம்; வசிட்டன் வாயாற்
புகழ்ந்ததற்பின் சொல்லுதற்கும் உண்டோ
சொற்கள்? 8