பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியக் காதை

௯எ


கலைமலிந்த கதிரேசர் செறிந்த கல்விக்
கடலாக அந்நகரில் விளங்குங் காலை,
புலம் விழைந்து வந்ததனுட் படிந்து மூழ்கிப்
புனலுண்டு திசையெங்கும் படர்ந்து சென்று
நிலங்குளிர்ந்து செழுமையுற மழைபொ ழிந்து
நிலவிவரும் மாமுகில்கள் பலவாம்; மேலும்
நலம்மிகுந்த தமிழ்ரொக பயிர்வ ளர்ந்து
நாட்டகத்து விளைபயனும் பலவாம் இங்கே. 18

மலர்விரிந்து கணிமிகுந்து நிழலும் நல்கி
மணம்பரப்பும் பூம்பொழிலே மணியார்; அங்கே
அலர்குடைந்து மட்டுண்ட சுரும்பி னங்கள்
அங்கங்கே யாழிசையை வழங்கி நிற்கும்;
நலமிகுந்த திங்கனியின் சுவைது கர்ந்து
நாடெங்கும் புள்ளினங்கள் பாடி நிற்கும்;
உலவிவருந் தென்றல் பல நன்ம ணத்தை
உடனேந்தித் திசையெங்கும் பரவி நிற்கும். 19

நலம்மிகுந்த சான்ரறோராய் இவர்பாற் கற்றோர்
நாவலராய் எண்ணிலராய் விளங்கு கின்றார்;
புலமையெனுங் கடலுக்குள் முழ்கி முழ்கிப்
புதுப்புதுநன் முத்தெடுத்து மக்கட் கீந்து
குலவிவரும் துணைவேந்தர்? ஒளியால் மேன்மை
கொண்டிலங்கும் மாணிக்கம் ஒருவர் ஆவார்
உலையிலவிழ் பதம்பார்க்கப் பானைச் சோற்றுக்
கொருசோறு போதாதே? போதும் போதும். 20


3. டாக்டர் வ. சுப. மாணிக்கனார்