பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௰அ

ஊன்றுகோல்

பகடு தனைப்பூட்டிப் பண்டியில் ஊர்வோர்

சகடு தனையிழுக்கத் தாங்குதித்து நிற்பார்

10



சுடுகாடும் அங்கே சுடர்விட்டுக் கண்ணிற்
படுமாறு தோன்றிப் படர்வாரை அச்சுறுத்தும்;
கள்வர் சிலரும் கரந்து திரிந்திடுவர்;
உள்ளின் எவரும் உளம்நடுங்கி வேர்த்திருப்பர்;

பாதை கடக்கப் படும்பாடு கண்டவர்தாம்

15



வாதை மறந்து வருவாரோ அவ்வழியில்?
அஞ்சல் நிலையம் அமைந்த இடமதுதான்
அஞ்சாறு கல்லிருக்கும்; அந்தோ! எனத்தோன்றும்;
பிள்ளைப் பருவத்தார் பேணும் அறிவபெறப்

பள்ளித் தலமொன்றும் பார்த்தறியார் அவ்வூரார்;

20



பேருந்து செல்லாப் பெருமை உடையதோர்
ஊரந்த ஊரேதான்; யாரங்குச் செல்வார்கள்?
கண்ட கதிரேசர் காட்டு வழிதிருத்துந்
தொண்டு செயநினைந்தார் தோலா முயற்சியினால்

அஞ்சலகம் கல்வி யறிவு தருஞ்சாலை

25



அஞ்சலின்றிச் செல்ல அழகு தருஞ்சாலை
உந்தூர்தி செல்ல உயர்பாலம் எல்லாமே
முந்திவரச் செய்தார் முனைந்து.