பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. விருதுபெறுகாதை




“செந்தமிழ் நூலிற் செறிதரு புலமையும்
வடமொழி நூலில் வன்மையும் தெளிவும்
சமய நூல்களிற் சார்பொருள் உணர்வும்
அமையும் செவ்விய ஆற்றல் கண்டோர்,
இயங்கு நூலகம் எனுங்கதி ரேசர்க்கு

வியந்து நயந்து விருதுகள் வழங்கினர்

5


பிறர்க்கு விருதுகள் தரற்குரி யார்க்குச்
சிறப்புறும் விருதுகள் சேர்த்தனர் ஆசையால்;
பலப்பல பட்டங் கிடைத்தன வாயினும்

நலத்தகு சபையார் நயப்புடன் நல்கிய

10


பண்டித மணியெனும் பட்டம் ஒன்றே
எண்டிசைப் பரவி ஏற்றம் தந்தது.
கவிமணி, பாரதி, கலைஞர் என்பன
அவரவர் பெயராய் அமைந்தன போல

இயற்பெயர் இதுதான் என்னும் வண்ணம்

15


இயக்கம் பெற்ற தெங்கணும் பரந்தே;
இருமொழி நூலுட் பெருகிய புலமும்
ஒருசபை வளர ஊக்கிய தொண்டும்”