பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நூல்தரு காதை

ககங



அளியர் [1] அவர்தாம் அளவில் வழுவுடன்
இலக்கண நெறியைத் தொலைத்தவர் எழுதித்20
தலைக்கன மேறிய புலைக்குன மாக்கள்
விலைக்கெனத் தமையே விற்கும் நாளில்,
சாலி நெல்லினுட் சார்தரும் பதரெனப்
போலிப் புலவரும் சிற்சிலர் புகுந்து
பாடல் உலகிற் பழுதுகள் புரிந்தே25
ஆடல் அயரும் அற்றை நாளில்,
வயங்கிய நம்தமிழ் வடமொழி யின்றி
இயங்குதல் இயலா தெனவுரை நாளில்,
வண்டமிழ், வடமொழி வயிற்றிற் பிறந்ததாம்
கண்டவர் போலிது கழறிய நாளில்30
இருள்படர்ந் தோங்கிய இலக்கிய உலகில்
மருளறு புலமை நெறியெனும் வானில்
சிவந்து மணியெனும் செங்கதிர் தோன்றலால்
உவந்தனர் விழித்தனர் உறங்கிய மாந்தர்
வஞ்சிப் பார்சிலர் வளர்த்துப் போற்றிய35
வெள்ளைச் செயலால் விளைந்த கலியெனும் [2]
ஆசிரியப் [3] பாவுரை [4] அளித்தனர் இவரே;
பன்மாண் கல்விப் பாற்கடல் கடைந்து
நுண்மாண் நுழைபுலந் தன்னல் வாரி
அமிழ்தெனத் தந்தனர் அரும்பெரும் நூல்கள்;40
இருமொழி பயின்றும் ஒருமொழி தாய்மொழி
பெரிதும் வளரப் பேணிக் காத்தனர்
தெள்ளிய புலமும் ஒள்ளிய அறிவும்
உள்ளவர் ஆதலின் ஒம்பினர் தமிழை;


  1. இரங்கத்தக்கார்
  2. துயரம்
  3. ஆசு+இரிய-குற்றம்நீங்க
  4. பாவும் உரையும்