பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்


அணிபெற்ற கவிக்கம்பன் பாட்டுக் கன்பர்
அரும்பொருளைத் தெரிந்துணர்ந்து விளக்கும்
சொல்லர்
பிணியுற்ற சமுதாயக் கேட்டை யெல்லாம்
பேர்த்தெடுத்த போர்மறவர் அன்பு நண்பர்
துணிவுற்ற [1] முருகப்பர் செட்டி நாட்டுச்
சுயமரியா தைப்பணிக்குச் சொந்தக் காரர்,
பிணியுற்றார் பண்டிதமா மணியார் என்று
பெருந்துயரிற் புறப்பட்டார் [2] யாமும் சென்றோம்.3

இவ்விருவர் தமக்குள்ளும் வேறு பட்ட
இருகருத்துக் கொண்டமையால் தனித்தி
ருந்தார் !
ஒவ்வொருவர் மனத்திடத்தும் பிளவே யன்றி
ஒன்றுபடும் நிலையில்லை; எனினும் அந்தச்
செவ்வியநற் புலவருக்கோ நோயென் றாங்கே
செயல்மறந்து துணைவியுடன் ஒடி வந்தார் ;
அவ்வியல்பை என்னென்போம் சான்றோர்
சான்றோர்
பாலரென அன்றுரைத்த மொழிபொய் யாமோ?4

அருகில்வரும் முருகப்பர் தம்மைக் கண்டார்
அப்புலவர் ஒவெனவே அலறி விட்டார் ;
உருகிவரும் உணர்ச்சியினால் குழந்தை போல
ஒருநொடியில் மாறிவிட்டார் ‘எனக்கு வந்த
பெருகுதுயர் தருநோயைப் பாரும் ஐயா
பிழைஎன்ன நான்செய்தேன் இறைவன் என்பால்
தருதுயரை யார்துடைப்பார் ஐயோ’ என்று
தாளாமல் அழுதழுது புலம்பி விட்டார்.5


  1. அமராவதிபுதூரில் மகளிர் இல்லம் கட்டிய சொ.முருகப்பனார்
  2. முடியரசன்