பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்


நெடிதுயிர்த்துச் சிறுநேரங் கழிந்த பின்னர்
நிறைதமிழின் சுவைகண்ட வாய்ம லர்ந்தார்;
அடியவனைக் காண்பதற்கோ அடிகள் வந்தீர்?
அன்புளத்தால் எனக்கருளத் தேடி வந்தீர்
அடிகள்திரு வடிபடர எனது சிற்றில்
அஃதென்ன மாதவந்தான் செய்த தோவன்
றடிமனத்திற் பூத்துவரும் உணர்ச்சிப் பூவை
அன்பெனுநார் தொடுத்தெடுத்து முன்னர்
வைத்தார். 15

எல்லாமாய் அல்லதுமாய் இருந்த பாங்கை
இருந்தபடி பொருள்விளங்க இருந்து காட்டிச்
சொல்லாமற் சொன்னவரை நினைந்து வாழும்
தொழிலுடையார் [1] உருக்குவதில் எடுப்பும் ஈடும்
இல்லாத வாசகத்தேன் மாந்தி மாந்தி
இளகுகிற மனமுடையார் [2], மீண்டும் வாயாற்
சொல்லாமற் பொழிவிழியால் முகக்கு றிப்பால்
தொழுமிருவர் சொல்வதெலாம் சொல்லிக்
கொண்டார். 16


  1. அடிகளார்
  2. பண்டிதமணியார்