பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதிர்மறை காதை


மக்கள் புலம்பல்

‘அன்னையை இழந்த எம்மை
ஐயநீ புரந்து நின்றாய்
பின்னைநீ பிரிந்து விட்டாற் ,
பேதுறு வேமைக் காக்க த
முன்னுவோர் எவரே உள்ளார்?
மூழ்கிய துயரை நீக்க
என்னயாம் செய்வோம்’ என்று
மக்கள் தாம் இரங்கி நின்றர்.1

'முந்தையாம் செய்த வத்தால்
முதல்வநின் மக்க ளானோம்
தந்தையாய்த் தாயாய் எம்மைத்
தாங்கியே புரந்து நின்ற
எந்தையே எங்குச் சென்ருய்
இரங்க-வைத் தேகி விட்டாய்!
எந்தவா றிதுபொ றுப்போம் ?
எங்ஙணம் உய்யு மாறே ?2


புலவர் புலம்பல்


’சிந்தித்துச் சிந்தித்து வாழ்நா ளெல்லாம்
செயலாற்றி வந்த தமிழ்ப் பெரியார் எங்கே ?
சிந்தித்துக் கண்டவற்றை நிரல்ப டுத்துச்
செவிகுளிரத் தந்தபே ரறிஞர் எங்கே ?
புந்திக்குள் இருளகற்றி ஒளியும் நல்கிப் ,
பொலிந்திருந்த கதிரெங்கே ? எங்கே ? என்று
சந்தித்த புலவரெலாம் கண்ணிர் சிந்தித்
தாளாத துயரத்தில் மூழ்கி நின்றார்.3