பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்

செல்வர் புலம்பல்

'பெருநிதியாற் களிப்புற்றேம் ஆயினும்யாம்
பேதலித்தேம் அமைதி யின்றி.
பெருமதியால் நிகண்ட பாட்டின்பப்
பேறனைத்தும் யாமும் துய்க்கத்
தருமுைறையால் தந்தனைநீ செல்வத்தைத்
தகுவழியிற் செலவு செய்ய
ஒருமதியால் உரைத்தனனைநீ; என்செய்வேம்?
ஒன்றறியேம்’ என்ருர் செல்வர்.4

திருமடங்கள் புலம்பல்


‘மணிமொழியை [1] மனம்வைத்தாய்
வளர்கலையை மதிவைத்தாய்
அணிமதியைத் தலைவைத்தான்
அடியிணையைத் தலைவைத்தாய்
பணிபுரியும் திருத்தொண்டர்
பழங்கதையும் மூவர்தரும்
கனிமொழியும் மொழிவதற்குக்
கதிர்மணியே நாவைத்தாய்.’5

உலகமெலாம் சிவமயமாய்
ஒளிபெறவே உளங்கொண்டாய்
அலகில்பிற சமயங்கள்
அடுத்துறினும் அகச்சமயம்
குலவிவருஞ் சித்தாந்தக்
குறிக்கோளைத் தெளிந்துணர்ந்தாய்
நலமருளும் சிவநெறியில் -
நடந்தொழுகும் அருள்பெற்றாய்.6


  1. திருவாசகம்