பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலைகாண் காதை

க௪௧

உலையாத உள்ளத்தால் முயன்று தாமே
உயர்நிலையில் முன்னேறி, ஏறுங் காலை
அலையாக வருமிடர்கள் அனைத்துந் தாண்டி,
அமுதமென இனிதாகப் பேசும் பேச்சுக்
கலையாலே மக்களுளங் கவர்ந்து நின்ற
கதிரிரண்டாம், [1]இலக்கியவான் நெறியில் ஒன்று
தலையான [2]அரசியல்வான் வழியில் ஒன்று
தமிழ்க்கதிரை அக்கதிர்தான் வாழ்த்திற் றம்மா!6


ஊன்றுகோல் கொண்டே யாண்டும்
உலவிநற் றமிழ்வ ளர்த்தார்
ஊன்றுகற் சிலையாய் நின்றார்;
ஆயினும் உய்வு காண
[3]ஊன்றுகோள் நமது ளத்தில்
ஒவ்வொன்றும் மணிகளாகும் ;
ஊன்றிநாம் எண்ணி யெண்ணி
உருப்பெற உழைத்தல் வேண்டும். 7

'அயன்மொழிப் பயிற்சி அன்னை
மொழியிடம் அன்பைக் கூட்டப்
பயன்படும் எனினும் இந்தி
பயின்றிட வற்பு றுத்தின்
இயல்பினிற் றமிழ்வ ளர்ச்சி
தடைப்படும் ஏற்றங் குன்றும்
மயலுளார் திணிப்ப ராயின்
வருபயன் இல்லை’ என்றார். 8


  1. பண்டிதமணி
  2. கலைஞர்.மு.கருணாநிதி
  3. ஊன்றியகொள்கை