22
என்பார் திருவள்ளுவர். இதற்குப் பரிதியார் ஐம்பொறிகளில் ஒன்று குறையினும் குற்றமின்று முயலாமையே குற்றம் எனவுரைத்தார். முடியரசர் விதியை நம்பி அழிவாரைக் கண்டு வேதனைப்படுபவராதலின், பரிதியார் உரையை மேற்கொண்டு பாட்டிசைக்கின்ருர்.
“பொறியின்மை கண்டு நெஞ்சம்
புழுங்கிலர் நாளும் நாளும்
அறிவறிந் தொழுகல் வேண்டி
ஆள்வினை உடைய ராகி
நெறியிலே நடந்து வந்தார்"
(2:26)
என்று பண்டிதமணியையும் நடக்கவைத்துக் காப்பியத்தையும் நடத்துகிருர் பாட்டரசர். காப்பிய நடையுடன் திருக்குறளும் பிறபல நன்னுாற் கருத்துகளும் விரவிநடக்கும் பாங்கு, இக் காப்பியத்தே ஆங்காங்கு இனங்கண்டு மகிழத்தக்கதாகும்.
பண்டிதமணியவர்கள் ஏழாம் ஆண்டிற் பள்ளிபுக்குச் சில மாதங்களே பயின்றனர். அப்போது அவர் கற்ற ஆத்திசூடி, உலகநீதி முதலிய சிறுசிறு நீதி நூல்களே அவரைப் பெரிதும் கவர்ந்தமையால், அவற்றை ஓதிஒதி மகிழ்ந்து, பிறகு சிறுகச் சிறுகப் பெருநூல்களையெல்லாம் தாமே கற்றுத்தேரும் திறமையுடையவராயினர்.
“ஒதிய ஆத்தி குடி
ஊன்றுகோல் ஆகக் கொண்டே
நீதிநூற் படிகள் ஏறி
நெடிய_காப்பியங்கள் என்னும்
விதிசேர் ஊர்கள் சுற்றி
வீறுகொள் சங்கச் சான்றோர்
ஒதிய இலக்கியத்தின்
உலகெலாம் உலவி வந்தார்"
(2:39)
ஆத்திசூடியில் தொடங்கிய புலமை, அதனையே ஊன்றுகோலாகக் கொண்டு, அளவிலா வளர்ச்சி பெற்றமை ஒர் அரிய நிகழ்ச்சியன்ருே? இங்ங்னம் பண்டிதமணியவர்களின் வாழ்வில் நேர்ந்த அரிய நிகழ்ச்சிகளே மட்டுமே இந்நூல் தொகுத்துரைக்கிறது.