பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊன்றுகோல்

27


"குளங்களில் நிறையும் நீர்தான்
      குறையினும் ஆங்கு வாழ்வோர்
உளங்களில் நிறையும் ஈரம்
      உலருதல் என்றுங் காணுர்
வளங்களிற் சுருங்கு மேனும்
      வழங்கலிற் சுருங்காக் கையர்
களங்களில் பதர்க ளுண்டு
      காளையர் மணிகள் போல்வர்" (1:11)

வருணனைகளில் இந்நூல் அருமையில் எளிய அழகைக் காட்டுகிறது. பண்டிதமணி அழகான தோற்றப் பொலிவு உடையவர். அதற்குக் கண்னேறு கழித்தல் போலவே, அவருக்குக் காற்குறை அமைந்திருந்தது. மேடையில் அவர் அமர்ந்திருந்து பேசும்போது, பரியவுடலும் பொன்னிற மேனியும் புன்னகை முகமுமாய் யாரையும் வயப்படுத்தும் தோற்றம் கண்ணையும் கருத்தையும் கவரும். அதை ஒவியம் திட்டுகிருர் பாவரசர்:

"சிரிப்பிருக்கும் அவர்வாயில்; பேசும்காலை
      சிந்தனையின் தெளிவிருக்கும் அவர்முகத்தில்;
விரித்திருக்கும் ஒளியிருக்கும் விழி பிரண்டில்;
      விரிநெற்றி பொலிவுபெற நீறிருக்கும்;
பருத்திருக்கும் கழியினே க்கை பிடித்திருக்கும்;
      பளபளக்கும் அக்கழியில் பூணரிருக்கும்;
விரித்திருக்கும் நீள்விரிப்பில் அமர்ந்திருப்போர்
      விழிகளுக்குள் வியப்பிருக்கும் களிப்பிருக்கும்."

"பொன்விசிறி மடிப்பொன்று தோளின்மீது
      புரண்டிருக்கும்; வடமொழியும் பயின்ரு ரேனும்
மின்முகிலிற் பொழியுங்கால் அயன்மொழிச்சொல்
      மேவாத தமிழிருக்கும்; பிறர்கருத்தை
முன்னியல்பின் எள்ளலொடு மறுக்குங்காலை
      முனைமழுங்காக் கூர்ப்பிருக்கும் இனிதமர்ந்து
நன்மணியார் நிற்காது பேசுகின்ற
      நாவண்மை கண்டுலகம் போற்றி
                              நிற்கும். (8:6,7)